Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
தேசிய அறிவியல் தின நல்வாழ்த்துக்கள்!
அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் புதுமைகளின் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்து வரும் அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு சர்.சி.வி.ராமன் அவர்கள் 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று கண்டுபிடித்த 'ராமன் விளைவு' என்ற மிக முக்கிய கண்டுபிடிப்பிற்காக நினைவுகூரப்படுகிறது. அறிவியல் சிந்தனையும், எதிலும் உண்மையை காணும் மனப்பான்மையும் தான் முன்னேற்றமான சமுதாயத்தின் அடித்தளம் என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.
ஆதாரப்பூர்வமான சிந்தனை, பகுத்தறிவு மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை வளர்ந்து, அறிவியல் மனப்பாங்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் வேரூன்ற வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b