ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது - 21 கிலோ கஞ்சா பறிமுதல்
திருவள்ளூர், 01 மார்ச் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலைய சாலையில் பொன்னேரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இளைஞர்கள் மூவரை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது அவர
கைது


திருவள்ளூர், 01 மார்ச் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலைய சாலையில் பொன்னேரி போலீசார் தீவிர

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான

வகையில் வந்த இளைஞர்கள் மூவரை மடக்கி சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களது பைகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மூவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய

விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் கொரட்டூரை சேர்ந்த சசிகுமார் 29, தஞ்சையை சேர்ந்த முகமது அல்லா பிச்சை 25, காட்பாடியை சேர்ந்த சுபாஷ் 23

என்பதும், மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி இளைஞர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து பொன்னேரி போலீசார் மூவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிந்து மூவரை நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam