ஆனைமலை ஆறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர், 01 மார்ச் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றும் செயல் வடிவத்தை வழங்கும் கட்சிக்கு தங்களுடைய ஆதரவு என்றும் இதுவரை திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தும் நிறைவேற்றவி
போராட்டம்


திருப்பூர், 01 மார்ச் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றும் செயல் வடிவத்தை வழங்கும் கட்சிக்கு தங்களுடைய ஆதரவு என்றும் இதுவரை திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தும் நிறைவேற்றவில்லை

என்றும் இதுவரை பேச்சுவார்த்தை கூட திமுக அரசு நடத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு வைத்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் செயல்

தலைவர் திரைப்பட முன்னணி ஒளிப்பதிவாளர் வெற்றி தலைமையில் உண்ணாவிரதப்

போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்து

நேற்று இரவு பந்தலை எல்லாம் காவல்துறையினர் பிரித்ததாகவும் ஆனைமலை ஆறு

திட்டத்தை நிறைவேற்ற நியாயமாக போராடும் எங்களுக்கு அடக்குமுறையை அரசு

கையாள்வதால் விவசாயிகளின் எதிரியாக நாங்கள் திமுகவை பார்க்கிறோம் என்றும்

வரும் சட்டமன்றத் தேர்தலில் 15 தொகுதி கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு பெரும்

பாதிப்பு ஏற்படும் என்றும் கோரி உடனடியாக இரு கட்சிகளில் எந்த கட்சி

தங்களுக்கு செயல் வடிவ வாக்குறுதியை வழங்குமே ஆனால் அந்த கட்சிக்கு தங்களுடைய

ஆதரவு என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தனர்.

இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதர

கட்சியினர்கள் பங்கேற்று போராட்டம் நடத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam