தமிழ்நாடு, புதுவையில்  நாளை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சென்னை, 01 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் நாளை தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அ
Anbumani


Hs


சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் நாளை தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகளுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியேற்றுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 2-ஆம் நாள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3412 மையங்களில் எழுதும் 8.27 லட்சம் மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும்.

மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவை 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தான். தங்களின் வாழ்க்கையில் இந்தத் தேர்வுகள் மிகவும் முக்கியமானவை என்பதைக் கருத்தில்கொண்டு மாணவச் செல்வங்கள் எந்த பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் கவனமாக படித்து 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ