Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 01 மார்ச் (ஹி.ச.)
கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்
மிகவும் பழமையான ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் சிலை உள்ளது.
இது பாதாள அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை
பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அத்திவரதர் 1915 ஆம் ஆண்டு காட்சி கொடுத்த பின்பு பாதாள அறையில் வைக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் அதன் பிறகு 98 ஆண்டு
காலம் வெளியே எடுக்காமல் இருந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு வெளிய எடுக்கப்பட்டு
பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாதாள அறையில் வைக்கப்பட்ட அத்திவரதர், இன்று மார்ச் 01 ம் தேதி முதல் 10ம் தேதி வரை
தொடர்ந்து பத்து நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இந்த அத்தி வரதரை தரிசனம் செய்ய கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை
தவிர பல வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் நாள்தோறும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
ஆயிரக்கணக்கானோர் அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்தனர் நீண்ட வரிசையில் வந்து
தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் அத்தி வரதருக்கு தைலக்காப்பு சாற்ற 300 ரூபாயும் புஷ்ப
சேவைக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயத்து வசூலித்து வருகிறது.
தைலக்காப்பு சாற்ற டிக்கெட் பெற்றவர்கள் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றுவதால்
பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு பெருமாள் தெரியவில்லை இதனால் பொது தரிசனத்தில் வந்த பக்தர்கள் காவல்துறையினர் மற்றும் ஆலய நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam