Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 01 மார்ச் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நம்பியம்பாளையம் பகுதியில் உள்ள அனந்தகிரி குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்பியம்பாளையத்தைச் சேர்ந்த தரணிஷ் (11), ஹரிஹரன் (8) ஆகியோர் பள்ளி விடுமுறை காரணமாக நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளனர்.
அப்போது அனந்தகிரி குட்டையில் குளிக்க இறங்கிய நிலையில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அவிநாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு, சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN