Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 01 மார்ச் (ஹி.ச.)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடியில் மார்ச் 5 ஆம் தேதி மாடு விடும் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் நிர்வாகம் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி பழைய காட்பாடியில் பொதுவாக பயன்படுத்தப்படும் விஐடி ரோடு / சென்னை சாலை உள்ளிட்டவற்றை மார்ச் 5 ஆம் தேதி போக்குவரத்திற்கு பயன்படுத்த இயலாது எனவே மாற்று பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு,பள்ளிகளுக்கு முன்கூட்டியே சென்று சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைவரும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் அறிவித்த நேரத்தில் மட்டுமே காளைகளை அவிழ்த்து விட வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
விழாவை காணவரும் பார்வையாளர்கள் அனைவரும் போட்டி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b