Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச)
சென்னை மண்ணடி கொத்துவாள்சாவடி அண்ணா பிள்ளை தெருவில் தனியாருக்கு சொந்தமான புதிய கட்டிடம் வேலை நடைபெற்ற வருகிறது.
கட்டிடத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் வேலை செய்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் கம்பிகளை வைத்து வேலை செய்து கொண்டுள்ளனர்.
அப்பொழுது முதல் மாடியில் இருந்து கம்பியை தூக்கிய போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்சார ஒயரில் ஒராய்ந்து மின்சாரம் பாய்ந்து உள்ளது.
அதில் மூன்று பேருக்கு மின்சாரம் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டனர் உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனி(23)என்பவர் இறந்துவிட்டார்.
அவரது தம்பி சுராஜ் (22) மற்றும் ரியாஸ்கான் (21) ஆகிய இருவருக்கும் மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கொத்தவால் சாவடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ