Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
முதலமைச்சரை சந்திக்க வருபவர்களுக்கு பிரத்யேக ஏற்பாடு அறிவாலயத்தில் செய்யப்பட்டுள்ளது.
பிரதான நுழைவு வாயில் வழியாக தொண்டர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முதலமைச்சரை சந்தித்த பின் பின் பக்க வழியாக வெளியேறுகின்றனர்.
பிரதான வெளியேறும் நுழைவு வாயில் வழியாக கூட்டணி கட்சி தலைவர்கள் வந்து செல்கின்றனர்.
அறிவாலயத்தை நோக்கி தொண்டர்கள் தங்களது வாகனத்தில் அணிவகுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக தேனாம்பேட்டை, அண்ணாசாலை கடும் போக்குவரத்து நெரிசல். அண்ணாசாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை, திருமாவளவன், வைகோ, முத்தரசன், சண்முகம், வீரபாண்டியன், தனியரசு, வேல்முருகன் உள்ளிட்டவர்கள் முதலமைச்சருக்கு நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் பலாப்பழம், வீரவாள் என விதவிதமான பரிசுகளுடன், மேள தாளத்துடனும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Hindusthan Samachar / P YUVARAJ