Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 01 மார்ச் (ஹி.ச)
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதனால் துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாள்கள் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படுகிறது.
இரவு 8.40 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபிக்கு 11.15 மணிக்கு சென்றடையும், அதேபோல் அபுதாபியில் இருந்து திங்கள், புதன் வெள்ளி மற்றும் ஞயிற்றுக் கிழமைகளில் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 5:45 மணிக்கு கோவை வந்தடையும், இந்த விமான சேவையானது ஈரான் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இதுதொடர்பாக இண்டிகோ நிறுவனத்தினர் கூறுகையில்,
அபுதாபியில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று 160 க்கும் மேற்பட்ட பயணிகள் அபுதாபி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தனர்.
ஈரான் போர் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் கோவை, அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் அந்த விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
விமான ரத்து செய்யப்பட்டதால் அதற்கான விமான டிக்கெட் கட்டணங்களை அனைத்தும் பயணிகளுக்கு திரும்பி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b