Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் கம்பெனிகள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோவிலும், வியாபார உபயோகத்துக்கு 19 கிலோவிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் விற்பனை செய்கின்றன.
சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை வைத்து எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றன.
இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றுகின்றன. இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் கம்பெனிகள் அறிவித்துள்ளன.
சென்னையில் 1,899.50 ரூபாய்க்கு விற்ற 19 கிலோ எடை கொண்ட வியாபாரத்துக்கான சிலிண்டர் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.868.50 காசுக்கு விற்பனையாகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM