முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொண்டு வந்தது வெறும் ஏட்டுத்திட்டங்கள் அல்ல, மாற்றத்துக்கான நாற்றங்கால்கள் - கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 01 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை ஒட்டி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு சமூக
Jsh


சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை ஒட்டி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்

புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை

விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை

மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு

இவை வெறும் ஏட்டுத் திட்டங்கள் அல்ல, மாற்றத்துக்கான நாற்றங்கால்கள்.

இவை அத்தனையையும் செய்து காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ