Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல், 01 மார்ச் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 70% வனப்பகுதிகளாக உள்ளது.
இந்த நிலையில் கொடைக்கானல் பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகளின் தாக்குதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்குவது அடிக்கடி அரங்கேற்றி வருகிறது.
குறிப்பாக இன்று அதிகாலை நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள பச்சை மரத்து ஓடை தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் வயது 25 , இவர் தற்போது குதிரை ஒன்றை வைத்து இதன் மூலம் வருமானம் ஈட்டி தனது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறார் .
இந்த நிலையில் இன்று காலையில் குடியிருப்பு பகுதியில் ஆக்ரோஷமாக வந்த ஒற்றைக் காட்டெருமை ஒன்று நின்று கொண்டிருந்த குதிரையை பலமாக தாக்கியதில் வயிற்றுப் பகுதி கிழிந்து அதிகளவு ரத்தம் வெளியேறியுள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த 2 மணியினருக்கு பின்பு பார்வையிட வந்துள்ளனர், மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அரசு கால்நடை மருத்துவர் இல்லாதது நிலையில் தனியார் மருத்துவருக்கு தகவல் தெரிவித்தும் இன்று விடுமுறை தினம் என்பதால் அவர் வருவதற்கும் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் இப்பகுதியில் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் தொடர்ந்து காட்டு விலங்குகளான காட்டெருமை காட்டுப்பன்றிகள் ஆகியவை மக்களை தினந்தோறும் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக சின்ன பள்ளம் பகுதியில் வளர்ப்பு பசுமாட்டை காட்டெருமை தாக்கி அதனை கவனத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் யாரும் கண்டுகொள்ளாததால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து இதுபோல் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல விரைவில் காலியாக உள்ள அரசு கால்நடை மருத்துவர் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam