மாருதி சுஸுகியின் முதல் மின்சார எஸ்யூவி காா் ‘இ விட்டாரா’ அறிமுகம்
சென்னை, 01 மார்ச் (ஹி.ச.) மாருதி சுஸுகி தனது முதல் மின்சார எஸ்யூவி காரான ''இ விட்டாரா''-வை அறிமுகம் செய்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், இந்த கார் ''பிஏஏஎஸ்'' திட்டத்தின் கீழ் ரூ.10.99 லட்சம் ஆரம்ப விலையில் அறி
மாருதி சுஸுகியின் முதல் மின்சார எஸ்யூவி காா் ‘இ விட்டாரா’ அறிமுகம் - விற்பனை விலை ரூ.10.99 லட்சம் முதல் தொடங்குகிறது


சென்னை, 01 மார்ச் (ஹி.ச.)

மாருதி சுஸுகி தனது முதல் மின்சார எஸ்யூவி காரான 'இ விட்டாரா'-வை அறிமுகம் செய்துள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், இந்த கார் 'பிஏஏஎஸ்' திட்டத்தின் கீழ் ரூ.10.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், காரின் விலையில் இருந்து பேட்டரி விலையை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக மாதத் தவணை அல்லது கிலோமீட்டர் பயன்பாட்டுக்கு ஏற்ப வாடகை வசூலிக்கப்படும்.

இதனால் காரின் விலை குறைவாக இருக்கும். மேலும், பேட்டரி பராமரிப்பு மற்றும் அதன் ஆயுட்காலம் பற்றிய கவலை இருக்காது.

'இ விட்டாரா' கார் வாங்குபவர்கள், பேட்டரிக்கான கட்டணத்தை ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.99 என்ற கணக்கில் இஎம்ஐ உடன் செலுத்தலாம்.

'இ விட்டாரா' கார் இரண்டு விதமான பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. அதிக திறன் கொண்ட பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், 543 கி.மீ வரை பயணிக்க முடியும்.

பேட்டரிக்கு 8 வருடம் அல்லது 1.60 லட்சம் கி.மீ வரை உத்தரவாதம் உண்டு. கூடவே, வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே 7.4 கி.வா சார்ஜர் இலவசமாகப் பொருத்தப்படும்.

இந்த 'இ விட்டாரா' காரை, நாடு முழுவதும் உள்ள 'நெக்ஸா' விற்பனை நிலையங்களில் ரூ.21,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM