Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 01 மார்ச் (ஹி.ச.)
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை வரும் 6 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் இலங்கை இடையேயான கடல் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் இலங்கையின் காங்கேசன் துறை துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் சேவை முன்னதாக இயக்கப்பட்டு வந்தது. தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதால், வரும் 6ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளதாக சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சேவை மூலம் தமிழகம் மற்றும் இலங்கை இடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் உறவினர் சந்திப்பு பயணங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் முன்பதிவு மற்றும் பயண நேர விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN