Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, மார்ச் 1, 01 மார்ச் (ஹி.ச.)
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மதுரையில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் அரசு விழா நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம்,
மற்றும்
கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகையில் இரவு தங்கினார்.
இன்று காலை 10:40 மணிக்கு தண்ணீர் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார்.
பின்னர்,மதியம் 1:55 மணிக்கு தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் மூலம் வருகிறார்.
பின்னர் விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2:45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைவார்.
விமான நிலையத்திலிருந்து காரில் செல்லும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மாலை 3.55 மணிக்கு சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர்,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தை முடித்துவிட்டு இன்று இரவு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
அமிர்த பாரத் அபியான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 1,300 ரயில் நிலையங்களை இந்திய ரயில்வே நவீன வசதிகளுடன் மறுவடிவமைப்பு செய்துள்ளது.
பூம்பாடி, மொரப்பூர், திருவாரூர், பொள்ளாச்சி, காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள எட்டு ரயில் நிலையங்களும், சென்னை கடற்கரைக்கும் எழும்பூருக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதைத் திட்டமும் ₹378 கோடி செலவில் உருவாகி இருக்கும்திட்டத்தை மதுரை நிகழ்வின் போது காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கின்றார்.
Hindusthan Samachar / Durai.J