முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
சென்னை, 01 மார்ச் (ஹி ச.) தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட சித்தாந்தத்தை செயல்முறையாக்கி செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அண்மையில் திமுகவில் இணைந்த முன்ன
Bs


சென்னை, 01 மார்ச் (ஹி ச.)

தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட சித்தாந்தத்தை செயல்முறையாக்கி செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

திராவிட மாடலின் நாயகர்களான தந்தை பெரியார் விதைத்த சமூகநீதி சிந்தனையையும்,பேரறிஞர் அண்ணா வடிவமைத்த அரசியல் மரபையும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் திமுக வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்று வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் நல்ல உடல் தேக ஆரோக்கியத்துடன், தளராத மனவலிமையுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெருவெள்ளமாக திரட்டி, மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் கழகத் தலைவர் தளபதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ