வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி
மதுரை, 01 மார்ச் (ஹி.ச.) தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர்,அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி


மதுரை, 01 மார்ச் (ஹி.ச.)

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

பின்னர்,அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,

சகோதர சகோதரிகளே, வணக்கம். பழமை வாய்ந்த புனித நகரமான மதுரைக்கு வருவதை பெரும் கவுரவமாக உணர்கிறேன். மீனாட்சி அம்மனுக்கும். சுந்தரேஸ்வரருக்கும் நான் தலைவணங்குகிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் பெருமிதமான அத்தியாமம் இன்று தொடங்கியுள்ளது.

இன்று ரூ.4.400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சிலவற்றை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளோம்.

இந்த திட்டங்கள் இணைப்புத் திறனை மாற்றியமைத்து, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தி, பல லட்சம் மக்களின் வாழ்க்கையை உருமாற்றக் கூடிய வகையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.

உயர்தர கட்டமைப்பை உருவாக்குவது என்பது மக்களுக்கு அதிகார பங்களிப்பை வழங்குவது என்று பொருள்.

தமிழகத்தில் 9 வந்தே பாரத், 9 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் 4,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர்-கடற்கரை 4-வது வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. பரமக்குடி, ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படும். பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்படும். 4 வழிச்சாலை ராமேஸ்வரத்தில் சுற்றுலாவை அதிகரிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே துறை சரித்திர மாற்றங்களை அடைந்துள்ளது.

எங்கள் அரசு வந்த பிறகு தமிழ்நாடு, ரெயில்வேக்கான நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம். தமிழ்நாட்டில் 1,300 கிலோ மீட்டருக்கு அதிகமான புதிய ரெயில் தடங்கள் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்கான நற்பெயர் எனக்கு கிடைத்துள்ளது.

பாதுகாப்பு. செயல் திறனை அதிகரிக்கும் வகையில் சுரங்கப்பாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவது நமக்கு பெருமை. இந்தியா முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் இனம்காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்.

2047-க்குள் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் ஒன்றிணைக்கப்படுவோம்.

தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியமான பங்கை ஆற்றும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடையவும், மாநில முன்னேற்றத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.

கடந்த பத்தாண்டுகளில், இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

குறிப்பாக இது தமிழ்நாட்டில் நன்றாகத் தெரிகிறது. பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு வியத்தகு முறையில் 9 மடங்கு அதிகரித்துள்ளது. 1300 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

97% மின்மயமாக்கல் அடையப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறன்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த பட்ஜெட்டில், பெங்களூரு - சென்னை மற்றும் சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் வழித்தடங்களை முன்மொழிந்துள்ளோம்.

இவை இந்த முழு பிராந்தியத்தின் பொருளாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்தும். மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரிய வழித்தடங்களின் ஒரு பகுதியாக தமிழகத்தை பட்ஜெட் நிலை நிறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b