கோவையில் நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
கோவை, 01 மார்ச் (ஹி.ச) கோவை மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் அடுத்த பூவாலை, வயலாமூர், அலமேலுமங்காபுரம், மணிக்கொல்லை, வேளங்கிப்பட்டு, பால்வாத்துண்ணான், சேந்திரக் கிள்ளை, தச்சக்காடு, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு நெல் ப
கோவையில் நெல் அறுவடை பணிகள் தொடக்கம்


கோவை, 01 மார்ச் (ஹி.ச)

கோவை மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் அடுத்த பூவாலை, வயலாமூர், அலமேலுமங்காபுரம், மணிக்கொல்லை, வேளங்கிப்பட்டு, பால்வாத்துண்ணான், சேந்திரக் கிள்ளை, தச்சக்காடு, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு நெல் பயிரிட்டனர்.

இந்நிலையில் நெற்பயிர்கள் வளர்ந்து, தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், நெல் அறுவடை செய்யும் இயந்திரம் மூலம், நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சத்திரம் சுற்றுப் பகுதிகளில், வெளியூர்களில் இருந்து வந்த, ஏராளமான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் மூலம், நெல் அறுவடை செய்யும் பணி தற்போது தீவிரமக நடைபெற்று வருகின்றது.

அறுவடை பணி தொடங்கியதால் நெல்லுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மேலும் விவசாய நிலங்களுக்கு அருகிலேயே அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதே போல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை அதிகமாக இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். டயா் பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,200-ம், செயின் வகை அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,800 முதல் ரூ. 3,000-ம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டை விட நிகழாண்டு தொடக்கத்திலேயே ரூ. 200 முதல் ரூ. 500 வரை வாடகை கூடுதலாக இருக்கிறது.

எனவே, அறுவடை பணிகள் முழுவீச்சை எட்டும்போது இயந்திரங்களுக்கான தேவை அதிகரித்து, வாடகையும் அதிகமாகும் என விவசாயிகள் அச்சப்படுகின்றனா்.

Hindusthan Samachar / vidya.b