Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 01 மார்ச் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகிலுள்ள திம்மராஜபுரம் பகுதியில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவப் புகைப்படத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது உண்மையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது யாராவது திட்டமிட்டு தீ வைத்துள்ளார்களா தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் பதற்றம் நிலவுகிறது.
அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN