இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
புதுடெல்லி 01 மார்ச் (ஹி.ச.) உலக அளவில் 20 முதல் 30 சதவீதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதையாகும். ஈரான், தங்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தால், ஹார்மு
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்


புதுடெல்லி 01 மார்ச் (ஹி.ச.)

உலக அளவில் 20 முதல் 30 சதவீதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி, உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதையாகும்.

ஈரான், தங்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தால், ஹார்முஸ் ஜலசந்தி பாதையை மூடி விடுவதாக நீண்ட காலமாக எச்சரித்து வருகிறது.

இப்போது, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஈரான் அதிகாரப்பூர்வமாக எதுவும் பெறப்படவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி பாதை மூடப்பட்டால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும். ஏனென்றால், இந்தியா தனது 80 முதல் 90 சதவீதம் கச்சா எண்ணெய்யை வெளிநாட்டிலிருந்து வாங்குகிறது.

சவுதி அரேபியா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெரும்பாலும் வாங்குகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை உடனே உயரும்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரும் நிலை ஏற்படும்.

அதாவது, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் உயர்ந்தால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் ஒரு பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும்.

இதனால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM