Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 01 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரியில் ரூ.2,700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளார்.
நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்து வருகிறார்.
இன்று காலை 10:30 மணியளவில் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வர உள்ளார். புதுச்சேரி விமான நிலையம் அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்
35,000 இருக்கையில் கொண்ட நிகழ்ச்சி திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரியில் 2713 கோடி ரூபாய்க்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
இதில் 1571 கோடி திட்டங்களுக்கு மதிப்பிலான 74 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார் .மேலும் 1142 கோடி மதிப்பிலான 19 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் புதுச்சேரி வர உள்ளது எடுத்து புதுச்சேரி மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீசாரின் முழு கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்
பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனி பாஸ் வழங்கப்பட்டுள்ளது பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி வழங்கி வருகிறார்கள்
புதுச்சேரி முழுவதும் இன்று ஆளில்லா விமானம் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ