குவாரிக்கு எதிராக பேசிய முதியவரை கொலை செய்ய முயற்சி - உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
புதுக்கோட்டை, 01 மார்ச் (ஹி.ச) புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாளி கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நி
போராட்டம்


புதுக்கோட்டை, 01 மார்ச் (ஹி.ச)

புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாளி கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தனியார் கல்

குவாரிக்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும்

நிலையில், கடந்த 25ஆம் தேதி அந்த பகுதி பொதுமக்கள் குவாரியை முற்றுகையிட்டு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குவாரி செயல்பாடு நிறுத்தப்பட்ட

நிலையில் கடந்த 27ஆம் தேதி மீண்டும் கிரஷர் மற்றும் குவாரி செயல்பட

தொடங்கியுள்ளது.

அதற்கு அப்பகுதியை சேர்த்த செல்வகுமார் எதிர்ப்பு தெரிவித்து ஹூ ஆர் யூ உரிமையாளர் பெனாட் அந்தோணி ராஜிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்பட்ட நிலையில், அவரை குவாரியின் உரிமையாளர் கரைக் கொண்டு மோதுவது போல் செயல்பட்டு, கொலை

முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதில் காயமடைந்த செல்வகுமார் புதுக்கோட்டை

மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர்

மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட

கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை அருகே

முத்துடையான்பட்டியில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள்

சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் அரை மணி நேரத்துக்கு மேலாக திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலையில், கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில்

ஈடுபட்டவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தள்ளுமுளாக மாறியது, இதன்

காரணமாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

அப்புறப்படுத்தப்பட்டனர்.

பின்னர் போலீசார் குவாரியை தற்காலிகமாக 10 நாட்களுக்கு செயல் பட விடாமல் மூட உத்தரவிடுவதாகவும், அதற்குள் சம்பந்தப்பட்ட

அதிகாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் போலீசார் உறுதி

அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam