மதுரை வந்தடைந்தார் பிரதமர் மோடி - ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
மதுரை, 01 மார்ச் (ஹி.ச) தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை வருகை தந்த பிரதமர் மோடி ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தார்


மதுரை, 01 மார்ச் (ஹி.ச)

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் ரூ.4.400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதில்,தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(நகாய்) சார்பில் ரூ.1853 கோடி மதிப்பில் பரமக்குடி -ராமநாதபுரம் இடையே 47 கி.மீ., துாரத்திற்கான நான்குவழிச்சாலை, ரூ.2157 கோடி மதிப்பில் மரக்காணம் -புதுச்சேரி இடையே 46 கி.மீ., துாரத்திற்கான நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள்,

மற்றும் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையேயான 4-வது வழித்தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.

மேலும்,மரக்காணம்-புதுச்சேரி பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b