Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 மார்ச் (ஹி.ச)
மத்திய கிழக்கு பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போர் சூழல் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் போர் சூழல் மிகவும் வேதனையளிக்கிறது. நிரபராத பொதுமக்களின் பாதுகாப்பே எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்.
இசுரேல், ஈரான் மற்றும் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டதும், வான்வழி கட்டுப்பாடுகள் மற்றும் விமான ரத்தாக்கள் ஏற்பட்டதும் அங்கு சிக்கியுள்ள நம் நாட்டினரும் பிற நாடுகளினரும் குறித்து கவலை அதிகரித்துள்ளது.
போர் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பையும் வெளியேற்றத்தையும் உறுதி செய்ய உடனடி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசாங்காம் மற்றும் சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் உறவினர்கள் பாதுகாப்பாக திரும்ப வர காத்திருக்கின்றன.
இக்கட்டான நேரத்தில் விரைவான நடவடிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் தெளிவான தகவல் பரிமாற்றம் அவசியம்.
அமைதிக்காகவும் வெளிநாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ