ஆதரவற்ற விதவையர் வருமான உச்சவரம்பு ரூ.8,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு
சென்னை, 01 மார்ச் (ஹி.ச) தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பை ரூ.4,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை பிறப்பித்துள்ள அரசாணைய
ஆதரவற்ற விதவையர் வருமான உச்சவரம்பு ரூ.8,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு


சென்னை, 01 மார்ச் (ஹி.ச)

தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பை ரூ.4,000-லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கான மாதாந்திர வருமான உச்சவரம்பு கடந்த 1993ம் ஆண்டு ரூ.1,000 ஆக இருந்தது. பின்னர், 2006ம் ஆண்டில் இது ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உச்சவரம்பை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, குடும்ப ஓய்வூதியம், தனிப்பட்ட தொழில் வருமானம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களில் இருந்தும் வரும் மாத வருமானம் ரூ.8,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் மட்டுமே இதில் அடங்குவர்.

விவாகரத்து பெற்றவர்கள் ஆதரவற்ற விதவை பிரிவின் கீழ் வரமாட்டார்கள். அரசுப் பணிகளில்

(பே லெவல் 10 வரை) பெண்களுக்கு ஒதுக்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டில், 10 சதவீத இடங்கள் ஆதாவற்ற விதவைகளுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b