Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 01 மார்ச் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் புக்கராய சமுத்திரம் அருகே ஏரிக்கரை ஓரத்தில் ஷீரடி சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது.
யாரும் இல்லாத நேரத்தில் அந்த கோவிலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் பக்தர் போல் வந்த நபர் ஒருவர் கோயில் கருவறையை வலம் வந்தபின் சாய்பாபா சிலையை வழிபட நின்றார்.
அப்போது அவருடைய கண்களுக்கு படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி சடாரி தெரிந்தது.
சுற்றும் முற்றும் பார்த்த அந்த நபர் அங்கு யாருமே இல்லை நம்மை யாரும்
பார்க்கவில்லை என்று கருதி சடாரியை எடுத்து பையில் போட்டு எடுத்து சென்று விட்டார்.
சற்று நேரத்தில் அங்கு வந்த கோவில் பூசாரி சடாரி காணாமல் போனதை அறிந்து சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த ஆசாமி சடாரியை எடுத்து சென்றது
தெரிய வந்தது.
சடாரியை எடுத்துச் சென்ற நபர் தம்மை யாருமே பார்க்கவில்லை என்று கருதினார்.
ஆனால் சிசிடிவி கேமரா அவருடைய மொத்த நடவடிக்கையையும் பார்த்துக்
கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் பற்றி கோவில் நிர்வாகம் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள புக்கராய சமுத்திரம் போலீசார் சடாரி திருடனை தீவிரமாக தேடி
வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam