திருமணமாகி 3 மாதத்தில் திருப்பூர் தொழிலதிபரின் மனைவி தற்கொலை
திருப்பூர், 01 மார்ச் (ஹி.ச.) திருப்பூர் மாநகரில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் தொழிலதிபரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் விக
Death


திருப்பூர், 01 மார்ச் (ஹி.ச.)

திருப்பூர் மாநகரில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் தொழிலதிபரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஸ் கண்ணன் என்பவருக்கும், திருப்பூர் கன்னாங்காடு பகுதியைச் சேர்ந்த ஷோபியா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஷோபியா தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகும் தனது படிப்பை தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் தகராறு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் ஷோபியா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN