தவெகவில் இணைய உள்ள அமெரிக்க வாழ் தமிழர்? சஸ்பென்ஸ் வைக்கும் செங்கோட்டையன்..!
ஈரோடு, 01 மார்ச் (ஹி.ச.) ஈரோட்டில் உள்ள ஜனனி திருமண மண்டபத்தில் ஈரோடு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கான செயல்வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்
செங்கோட்டையன்


ஈரோடு, 01 மார்ச் (ஹி.ச.)

ஈரோட்டில் உள்ள ஜனனி திருமண மண்டபத்தில் ஈரோடு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கான செயல்வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதை தொடர்ந்து பேட்டி அளித்த அவர்,

நாளை தமிழகத்தை ஆளப்போவது மட்டுமின்றி, வரும் 2026 இல் தேசியக் கொடியை ஏற்றி வீறு நடை போகிறவர் தளபதி தான்.

அமெரிக்காவில் இருக்கிறவர், சாதாரண ஆள் இல்லை, டாப் ரோலில் இருக்கிறவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறார். அவரது பெயர் சொன்னால் நன்றாக இருக்காது என சஸ்பென்ஸ் வைத்தார்.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனின் சஸ்பென்ஸ் வைக்கும் பேச்சு அரசியல் களத்தில் விவாதப்பொருள் ஆகியுள்ளது.

யார் அந்த நபர்? எப்போது கட்சியில் இணைகிறார்? போன்ற எதிர்பார்ப்பு தமிழக வெற்றி கழகத்தினர் இடையில் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam