நாளை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சென்னை, 10 மார்ச் (ஹி.ச) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (மார்ச் 11) நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுத உள
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து


சென்னை, 10 மார்ச் (ஹி.ச)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (மார்ச் 11) நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாளை மார்ச் 11-ஆம் நாள் புதன்கிழமை தொடங்குகின்றன.

தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 4219 மையங்களில் எழுதும் 9.09 லட்சம் மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்கள் அனைவரும் இத்தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும்.

மேல்நிலை வகுப்பில் எந்தப் பாடத்தைத் தேர்வு செய்யலாம் என்பதைத் தீர்மானிப்பவை 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் தான்.

தங்களின் வாழ்க்கையில் இந்தத் தேர்வுகள் மிகவும் முக்கியமானவை என்பதைக் கருத்தில்கொண்டு மாணவச் செல்வங்கள் எந்த பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் கவனமாக படித்து பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b