Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 10 மார்ச் (ஹி.ச.)
ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.
2025-2026-ம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, பவானிசாகர் அணையிலிருந்து, காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 10.11.2025 முதல் 09.03.2026 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, மேலும், இன்று ( 10.03.2026) முதல் 31.03.2026 முடிய 22 நாட்களுக்கு பாசன காலத்தை கால நீட்டிப்பு செய்து பவானிசாகர் அணையிலிருந்து 950.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b