பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் தவெக இணையாது - அண்ணாமலை
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன் வைத்து சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்த
Annamalai


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

2024 ம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை முன் வைத்து சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுவதாக பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை அவதூறு வழக்கு தொடர்ந்தருந்தார்.

அவதூறு வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று ஆஜரானார்.

பின்னர்,அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது,

ஆர்.எஸ்.பாரதி மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கில் சாட்சியம் அளிக்க இன்று ஆஜரானேன்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கள்ளக்குறிச்சி மரணத்தில் பாஜக சம்பந்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மன்னிப்பு கேட்க கோரி நோட்டிஷ் வழங்கினோம். 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டோம்.

கடந்த முறை டி.ஆர்.பாலுவை குறுக்கு விசாரணை செய்தபோது என் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

அது குறித்து டி.ஆர்.பாலு மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்

டிஆர் பாலு மீதான வழக்கை நீதிமன்றம் ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

யார் மீது வேண்டுமானாலும் அபாண்டமான அவதூறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது திமுக.

பொது வாழ்க்கைக்கு சாமானியர்கள் வருவதை தடுக்க ஆர்.எஸ் .பாரதி போன்றவர்கள் மூலம் அவதூறுகளை பரப்புகிறது திமுக. யார் மீதும் அவதூறு வழக்கு தொடர கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது.

முதல் முறையாக ஆர்எஸ் பாரதி மீதுதான் அவதூறு வழக்கு தொடர்ந்தேன். ஆனால் கலிகாலத்தில் இதை செய்தால்தான் நியாயம் கிடைக்கும் போல,

பாஜக அதிமுகவை விழுங்கி வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதிமுக விற்காக முதலமைச்சர் போலியாக கண்ணீர் வடிக்க வேண்டாம்.

முதலமைச்சர் திமுகவிற்காக வேண்டுமானால் கண்ணீர் வடிக்கலாம். திமுகவை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர் . மக்களை திசை திருப்ப முயல்கிறார் முதலமைச்சர்.

1999 -2003 வரை திமுக பாஜக கூட்டணியில் இருந்தது. அப்போது பாஜக திமுகவை விழுங்கியதா?

தேர்தல் காலத்தில் கூட்டணி வைப்பது இயல்புதான். கம்யூ , விசிகவை கூட்டணியில் இருப்பதால் திமுக விழுங்கிவிடுமா.

காங். திமுகவை விழுங்கி விடுமா?எங்கேயும், எந்த கட்சியையும் நாங்கள் விழுங்கியதில்லை.

நிதிஸ் குமார் , ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் குறைவான எம்எல்ஏக்களையே பெற்றிருருந்தும் பாஜக மூலம் முதலமைச்சர் ஆக்கப்பட்டனர்.

சவுதியில் இருந்தே நமக்கு பெரும்பாலும் எல்பிஜி வருகிறது .ஈரான் கடல் வழிகளை அடைத்துள்ளதால் அசாதாரண சூழல் நிலவுகிறது. மத்திய அரசு எல்பிஜியை சவுதியிடம் இருந்தே அதிகம் வாங்குகிறது.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்.

வீடுகளுக்கு தேவையான எரிவாயு , பெட்ரோல் டீசல் இடையூறு இல்லமால் கிடைக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

2014 ல்14 கோடி குடும்பங்களிடம் இருந்த எரிவாயு இணைப்பு இப்போது 33 கோடியாக உயர்வு.

60 சதவீதம் இறக்குமதி மூலமே பெட்ரோலிய சேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

மத்திய அரசு கணிசமான அளவு பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட எரிவாயுவை இருப்பு வைத்துள்ளது,மக்கள் அச்சப்பட தேவையில்லை.

விஜயுடன் அதிகாரபூர்வமாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என நயினார் நாகேந்திரன் தொடர்ந்து கூறி வருகிறார். டீயும் காபியும் ஒருபோதும் ஒன்றாக கலக்காது,

காரணம் சித்தாந்தங்கள் வேறு. ஊடகங்கள் ஊகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர்.

ஏஎன்எஸ். பிரசாத் மூத்த உறுப்பினர் ,

நல்ல செய்தித் தொடர்பாளர்.

அவர் எதற்காக நீக்கப்பட்டார் என்று நாமாக எந்த முடிச்சும் போட வேண்டாம் , தேர்தலில் அவருக்கு வேறு வேறு பொறுப்புகள் அவருக்கு வழங்கப்படும்.

பிரதமரின் நாளைய திருச்சி வருகை திருப்புமுனை தரும்.

நாடாளுமன்றத்தில் வளைகுடா போர் குறித்து விவாதிக்க நோட்டிஷ் வழங்கப்பட்டு விட்டது.

வெளியுறவு கொள்கை குறித்த நாடாளுமன்ற குழுவின் தலைமை பொறுப்பு காங். கட்சியை சேர்ந்த சசிதரூர் வசமே உள்ளது.

எனவே ராகுல் காந்தி தேவையற்ற கருத்துகளை கூற வேண்டாம் என்று கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ