கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் மார்ச் 15 ஆம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன்
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர்
CBI Summons TVK Leader Vijay


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,

இந்த வழக்கின் விசாரணை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் மூன்றாவது முறையாக இன்று (10.03.2026) மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்குப் புதிதாகச் சம்மன் அனுப்பப்பட்டது.

மற்றொருபுறம் த.வெ.க. வேட்பாளர்கள் நேர்காணலை விஜய் இன்று தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மார்ச் 15-ஆம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக விஜய் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இத்தகவலை த.வெ.க. இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b