வடக்கு கடற்கரை பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற 6 நபர்கள் கைது
சென்னை, 10 மார்ச் (ஹி.ச.) சென்னை பெருநகர காவல், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈவ்னிங் பஜார், RBI சப்வே அருகில் காவல்குழுவினர், ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நின
கைது


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)

சென்னை பெருநகர காவல், B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈவ்னிங் பஜார், RBI சப்வே அருகில் காவல்குழுவினர், ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது,அவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட காவலர்கள் தப்பி ஓட முயன்ற நபர்களை மடக்கி பிடித்து, விசாரணை செய்தபோது, அவர்கள் கொள்ள சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கத்தி மற்றும் இருசக்கர வாகனங்களுடன் தயாராக இருந்தது தெரியவந்தது.

குற்றச் செயலில் ஈடுபட இருப்பது தெரிய வந்த நிலையில்,5 நபர்களையும் 2 இருசக்கர வாகனங்களுடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

B-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற குற்றவாளிகள் முகிலன் (வயது 21), அஜய் (வயது 26), முருகேஷ் (வயது 29) அமீது (வயது21), பாஸ்கர் (வயது 19),ஆகியோரை கைது செய்து. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam