Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 10 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் போர் காரணமாக புதுச்சேரியில் வர்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே வரும் என்பதால் ஹோட்டல்களுக்கு வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா நகரான புதுவையில் 700-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. அத்துடன் ஏராளமான சாலையோர உணவகங்களும் இயங்குகின்றன. சுற்றுலா பயணிகள் பெரிய ஹோட்டல்கள் தொடங்கி சிறிய ஹோட்டல்களை நம்பி புதுச்சேரி வருகின்றனர்.
இது குறித்து புதுவை ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதுச்சேரியிலுள்ள 700-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட வணிக சிலிண்டர்கள் தேவை.
சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டாதால் நாளை (மார்ச் 11) முதல் படிப்படியாக ஹோட்டல்கள் மூடப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b