குடும்ப பிரச்சினை காரணமாக, கணவன் மனைவி விஷம் குடித்து உயிரிழப்பு
திண்டுக்கல், 10 மார்ச் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே, அரியநல்லூரைச் சேர்ந்த ராமையா (58) என்பவர் ஆரிய நல்லூரில் பால் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இந்திரா காந்தி (52) என்ற மனைவியும், தி
தற்கொலை


திண்டுக்கல், 10 மார்ச் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே, அரியநல்லூரைச் சேர்ந்த ராமையா (58) என்பவர் ஆரிய நல்லூரில் பால் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், டீக்கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு இந்திரா காந்தி (52) என்ற மனைவியும், திருமணமான ஒரு மகன், மகள் உள்ளனர். இதில், மகன் திருமணம் செய்த வீட்டில் மகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், மகன் மருமகளும், அதேபோல் மகள் மருமகனும் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்து, மகளை கணவர் வீட்டிற்கும், மருமகளை ராமையா வீட்டிற்கும் அழைத்து வந்து வாழ்ந்து வந்தனர்.

ஆனால், குடும்ப பிரச்சினை காரணமாக ராமையா இவரது மனைவி இந்திராகாந்தி இருவரும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

இதனால், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ராமையா இவரது மனைவி இந்திராகாந்தி ஆகிய இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தான விஷத்தை குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ராமையா இவரது மனைவி இந்திராகாந்தி இருவரும் உயிரிழந்தனர்.

கணவன் மனைவி தற்கொலை குறித்து சின்னாளபட்டி காவல் ஆய்வாளர் சுபத்ரா வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam