Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தில், தமிழ்நாடு பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தேர்தல் நேரத்தில் முதல்வர் தன்னுடைய பதவியை மறந்து பொறுப்பில்லாமல் பேசி வருகிறார்.
ஒரு முதலமைச்சர் பொதுவெளியில் பேசும்போது இப்படி பேசலாமா!?
1999 ல் அவருடைய அப்பன் தான் தமிழகம் காவிமயமாக வேண்டும் என்று விரும்பினார்.
கருப்பு சிவப்பு இருக்கும் வரை காவி உறுதியாக தமிழகத்தில் இருக்கும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நோய், அந்த நோயை பாஜக பரப்புகிறது என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் அவரது தந்தை இந்த நோயை பரப்பினாரா? நோய் பரப்புவதில் வல்லுனராக இருந்தாரா கருணாநிதி என்று நான் கேட்கிறேன்.
பிரதமர் நாளை 5,500 கோடி ரூபாய் திட்டங்களை வழங்குவதற்காக திருச்சி வருகிறார் அதனை முதல்வர் வேண்டாம் என்று சொல்லிவிடுவாரா?
திமுக காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த வரி பகிர்வை விட நிதி பகிர்வை விட அதிகமாக தான் பாஜக அரசு வழங்கியது.
கடந்த பத்தாண்டுகளில் வரி பகிர்வாக மட்டுமே 7 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
14 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
பாஜக தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலைகளினுடைய விகிதம் 40% அதிகரித்து இருக்கிறது.
தமிழக ரயில்வே திட்டங்களை எடுத்து பார்த்தால், சராசரியாக காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 870 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக ஆட்சியில் 8.5 மடங்கு அதிகமாக உயர்த்தி 7,611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி வர்த்தக நகராக மாறி இருக்கிறது என்று முதல்வர் மார்தட்டி கொண்டிருக்கிறார். அதற்கு முழு காரணம் மத்திய அரசுதான் என்பதை அவர் நினைவு கொள்ள வேண்டும்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில்கள் தாமதமாவதற்கு காரணம் இந்த மாநில அரசு தான்.
தமிழ்நாட்டில் மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு தனியாக சென்று விட வேண்டாம்.
நாளொரு கொலையும், பொழுதொரு பாலியல் சம்பவமும், குற்றமும் நடந்து வருகிறது.
யாரை எங்கு வேண்டுமானாலும் வெட்டலாம் குத்தலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.
அவர்கள் சொல்லாதது எதையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலே போட வேண்டும்.
பெண்களை பாதுகாப்போம் என்று சொன்னார்கள், ஆனால் பெண்களை பாதுகாக்க அவர்களால் முடியவில்லை.
பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை.
எல்லா திட்டங்களிலும் மாநில அரசு மிகப் பெரிய மோசடியை செய்திருக்கிறது. அதனை சிஏஜி அறிக்கை தெளிவாக தெரிவித்து இருக்கிறது.
ஸ்டாலின் 2.0 திட்டமெல்லாம் வேண்டாம், ஸ்டாலின் 1.0 இல் இந்த மாநிலத்திற்கு என்ன செய்தீர்கள் என்பதை வெளியிடுங்கள்.
உற்பத்தி மாநிலங்களில் பின்தங்கி இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான்.
தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு பின்தங்கி இருக்கிறது.
திமுக மற்ற கட்சிகளை அடிமையாக நிறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு கட்சி.
காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளையும் அடிமையாக கருதி கொண்டிருக்கிறது திமுக தவிற தானே பாரதிய ஜனதா கட்சி கிடையாது.
நிதிஷ்குமார் பீகாரில் தேசிய அரசியலில் வரவேண்டும் என மாநிலங்களை உறுப்பினரானார்.
அது அவருடைய சொந்த விருப்பம் அவரது கட்சியினுடைய விருப்பம், இதில் காங்கிரசுக்கு என்ன வந்தது.
தொடர்ந்து இது போன்ற தவறான கருத்துக்களை முதலமைச்சர் பேசுவது முதலில் அவருடைய கண்ணாடியை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஈரான் அமெரிக்கா யுத்தத்தால் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன் பாஜகவினுடைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
நேற்று பாராளுமன்றத்தில் துறை சார்ந்த அமைச்சர் மிகத் தெளிவாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்.
மக்கள் பதட்டம் அடையக் கூடாது, ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு மக்களுடைய பதற்றத்தை ஏற்பட்டால் கூட அதனை சரி செய்யும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னை நிறுவனங்கள் முன்னேற்பாடுடன் இருக்கின்றன 90 விழுக்காடுக்கு மேலாக இறக்குமதி செய்கின்றோம், கப்பல்கள் நகரவில்லை என்றாலும் கூட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் தொடர்பு கொண்டு எரிவாயும் கிடைக்கும் அளவிற்கு முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறோம்.
வரக்கூடிய காலங்களில் இந்த நிலைமை உறுதியாக சீரடையும். உலக நாடுகள் பலவற்றில் எரிவாயு தட்டுப்பாடு இருக்கும்பொழுது கடந்த 10 வருடங்களாக நாம் ஏற்படுத்திருக்கக்கூடிய பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நமக்கு கையிருப்பு அதிகமாக இருக்கின்றது.
இந்தியாவில் மட்டும் தான் எரிபொருள் தட்டுப்பாடு என்பது இப்போது இல்லை.
எதிர்க்கட்சிகள் திட்டமிட்ட ரீதியில் மக்களை பதற்றம் ஆக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் முதலமைச்சர் ஸ்டாலினும் இதுபோன்று செய்து கொண்டிருக்கிறார் என்று அவர் பேசினார்.
Hindusthan Samachar / P YUVARAJ