கோவில் திருவிழா தகராறில் ஒருவர் அடித்துக் கொலை!
மதுரை, 10 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் மேலூர் திருவாதவூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த பூக்குழி திருவிழாவில் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் தகராறாக
Murder


மதுரை, 10 மார்ச் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் மேலூர்

திருவாதவூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த பூக்குழி திருவிழாவில் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த தகராறின் போது அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுன் (32) என்பவரை ஒரு கும்பல் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அர்ஜுன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த தாக்குதலில் அவரது சகோதரர்களான மணிகண்டன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக மணி, அஸ்வின், அங்கு பாண்டி, கண்ணதாசன், அய்யனார், சந்தோஷ், சேகர் மற்றும் விஜய் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் திருவாதவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN