Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 10 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் நகை அடகு கடன் வழங்கும் பிரிவில் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.
வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த ரகுவரன் என்பவர் போலி நகைகளை உண்மையான தங்க நகைகள் என மதிப்பிட்டு கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறையில் பலமுறை போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.2 கோடி 10 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டதாக வங்கி நிர்வாகம் கண்டறிந்தது.
தொடர்ந்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மோசடியில் தொடர்புடையதாக நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் இந்த மோசடியில் வேறு யாராவது தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல வங்கியிலேயே போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்ற இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN