Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச.)
சென்னை
பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வந்த லாவன்யா (35) தனது மகள் இனியாவை பள்ளிக்கு அழைத்துச் செல்ல இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
இனியா அப்பகுதியில் உள்ள பெலினி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அங்கு சென்ற லாரியை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென லாரி மோதியதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தாய், மகள் இருவரும் கீழே விழுந்தனர்.
அந்த நேரத்தில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கியதால் லாவன்யா மற்றும் இனியா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN