Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது பேசிய அவர்,
வரலாறு காணாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சியில் உள்ளதாகவும் இதுவரை இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏன் சிலிண்டர் விற்பனை செய்த வரலாறு கிடையாது ஆனால் இதுவே முதல்முறை என குற்றம் சாட்டிய அவர் இந்தியாவின் வெளியுறவு கொள்கை அனைத்தையும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி அடகு வைத்து விட்டதாக கூறினார்.
சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் திறக்காமல் உள்ளார் என கேள்வி எழுப்பிய செல்வப் பெருந்தகை சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் ஒரு சிலிண்டர் வைத்திருப்பர்கள் 21 நாளும், 2 சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் 1 மாதம் கழித்து தான் புக் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்கள்,
இந்த அறிவிப்பின் மூலம் அடுப்பு ஊத வேண்டும் எனும் பண்டைய காலத்திற்கு அழைத்து செல்கிறார் என கூறிய அப் சிலிண்டர் விலை உயர்வு குறித்து எடப்பாடி பழனிச்சாமி மெளனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தோழமை கட்சிகள் கோரிக்கை வைப்பார்கள், கண்டிப்பார்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வாய்ப்பூட்டு போட்டுள்ளனர் ? என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி ஏன் வாய் மூடி மெளனியாக உள்ளார், மத்திய அரசை எதிர்க்க வேண்டாம், குறைந்த பட்சம் கோரிக்கையாவது வைக்கலாம் என அறிவுறுத்திய செல்வப் பெருந்தகை பெட்ரோலியத்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் தற்போது தமிழ்நாடு அரசு இது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாகவும் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் நல்ல நடவடிக்கை எடுப்பார் என கூறினார்.
இந்தியாவை ஆள்வது இந்திய பிரதமரா அமெரிக்காவ என்ற கேள்வியெழுகிறது என்றும்
எடப்பாடி பழனிச்சாமி, ஜி.எஸ்.டி, நீட், உதய் மின் திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டது போல் பிரதமர் மோடி அமெரிக்காவிடம் கையெழுத்திட்டுள்ளதாகவும் விலை ஏற்றத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய அவர் 210 தொகுதிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிறிஸ்டோபர் திலக்கிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ