Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மார்ச் (ஹி.ச)
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வரும் சர்வதேச விமான சேவைகள் கடந்த 2 ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இந்தியா–யுஏஇ இடையிலான பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மதுரை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் துபாய் – மதுரை மற்றும் அபுதாபி – மதுரை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமான சேவைகள் மீண்டும் எப்போது இயல்புநிலைக்கு திரும்பும் என்பது குறித்து நிலைமைக்கு ஏற்ப விமான நிறுவனங்கள் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் தங்களது விமான நிலை (Flight Status) குறித்து சரிபார்க்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மதுரை- துபாய் செல்ல ஸ்பைஜெட் விமானம் நாளை முதல் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
8 நாட்களுக்குப் பிறகு துபாயில் இருந்து மதுரைக்கு விமான சேவை இயங்க உள்ளது
மேலும் துபாயிலிருந்து ஸ்பைஜெட் விமானம் மதுரை,புனே,ஜெய்ப்பூர், கொழிக்கோடு, அகமதாபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு நாளை விமான சேவை நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ