பாப்பிரெட்டிபட்டியில் தெரு நாய்கள் கடித்து ஐந்து சிறுவர்கள் படுகாயம் -மருத்துவமனையில் அனுமதி
தருமபுரி, 10 மார்ச் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகளில் பலநூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றிதிரிந்து வருகின்றது. குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் என கடித்து வருவது தொடர்ந்து வந்த நிலையில் பேரூ
தெருநாய்


தருமபுரி, 10 மார்ச் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகளில்

பலநூற்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றிதிரிந்து வருகின்றது.

குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் என கடித்து வருவது தொடர்ந்து வந்த நிலையில்

பேரூராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுபடுத்துவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தது.

இந்த நிலையில் 10-வது வார்டு பகுதியான காளியம்மன் கோவில் தெருவில்

மட்டும் ஐம்பதுக்கு மேற்பட்ட தெருநாய்கள் உள்ளது.

இந்த தெருநாய்களை

5 -குழந்தைகளை தெரு நாய்கள் துரத்தி மிக மிக மோசமான முறையில் பல இடங்களில் கடித்துள்ளது.

தெரு நாய்களை கட்டுபடுத்த

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் பல முறை புகார் செய்தும்

பேரூராட்சிநிர்வாமும்,சுகாதாரதுறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்

எடுத்தவில்லை,நாய்கள் கடித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் வந்து பார்த்து விசாரனை கூட செய்யவில்லை

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம், பஸ்டேன்ட், ரிஜிஸ்டர்ஆபிஸ், தெருக்கள் என இதுவரை சுமார் 30- க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடத்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக தெருநாய்களை கட்டுபடுத்த பேரூராட்சி

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam