2800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தீயிட்டு அழிப்பு
நீலகிரி, 11 மார்ச் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி கர்நாடக எல்லையில் இருப்பதால், அங்கிருந்து ஏராளமான அளவில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகிறது. அவ்வாறு கடத்தி வரக்கூடிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை க
Drug Demolished


நீலகிரி, 11 மார்ச் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி கர்நாடக எல்லையில் இருப்பதால், அங்கிருந்து ஏராளமான அளவில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகிறது.

அவ்வாறு கடத்தி வரக்கூடிய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கூடலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 2800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இன்று கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நகராட்சி குப்பை கிடங்கில் தீயிட்டு எரிக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN