Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 மார்ச் (ஹி.ச)
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக, சென்னை பி.எஸ்.என்.எல். நிறுவன முதன்மை பொது மேலாளர் ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பிஎஸ்என்எல் சென்னை வட்டத்தின் முதன்மை பொது மேலாளராக இருந்து வரும் ராஜேந்திரன் கடந்த 2017 -19ம் ஆண்டு காலக்கட்டத்தில், கேரளா மாநிலம் திரிச்சூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில், முதன்மை பொது மேலாளராக பணியாற்றி உள்ளார்.
அப்போது, கேரளாவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில், பூமிக்கு அடியில் தொலைத்தொடர்பு கேபிள் பதிப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
அதில் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.அதனால், அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன் பின் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு பணிகள் தொடர்பான நிலுவையில் உள்ள பில்களை செலுத்துவதற்காக ஸ்ரீல் தீபக் எஸ் என்ற ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
2017-2020 ஆம் ஆண்டில் ஒப்பந்ததாரர் சுமார் 7.10 கோடி மதிப்புள்ள பிஎஸ்என்எல் திட்டங்களை நிறைவேற்றியதாக தெரியவந்துள்ளது.
ஆனால், நிலுவையில் உள்ள தொகைகளை பெறுவதற்காக ஒப்பந்ததாரர் ,ராஜேந்திரனை அணுகியபோது, பில்களை அங்கீகரிக்க பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜேந்திரன் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 1.90 லட்சம் மற்றும் 1.10 லட்சம் தொகையை கடந்த 2020 ஜனவரி மாதம் ராஜேந்திரன் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள லஞ்சப் பணத்தை கேட்ட போது தர மறுத்த ஒப்பந்ததாரர் இந்த புகாரை ஆதாரங்களுடன் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள் மார்ச் ஒன்றாம் தேதி ராஜேந்திரன் தொடர்பான இடங்களில் சோதனைகள் நடத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் சென்னையில் பணிபுரிந்து வரும் பிஎஸ்என்எல் அதிகாரி ராஜேந்திரன் மீது கொச்சை சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜேந்திரன், அடுத்த மாதம் பணி ஒய்வுபெற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / P YUVARAJ