Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 11 மார்ச் (ஹி.ச)
சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த மெர்லின் தாம்சன் என்ற தொழிலதிபர் கவின் ஏஜென்சிஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் வேல் பழனி எனும் வின்சன் பால் என்பரிடம் ரூபாய் 45 லட்சம் கடந்த கடந்த 2021 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
இதற்கு வட்டியாக ரூபாய் 69 லட்சம் திருப்பி அவரது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.
இருப்பினும் மேலும் பணம் கேட்டு வின்சன் பால் தொல்லை செய்ததால் நீதிமன்றத்தில் சட்டப்படி தீர்த்துக்கொள்வோம் என மெர்லின் தாம்சன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மார்ச் 5-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், புது கார்கனா தெருவில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற தன்னை வின்சென்ட் பால் மற்றும் அவரது தம்பி அருண் 3 அடியாட்களை அழைத்து வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக மெர்லின் தாம்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இன்று விசாரணைக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளனர்.
இதில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிப்பதாக மெர்லின் தாம்சன் தெரிவித்துள்ளார்
Hindusthan Samachar / vidya.b