சென்னையில் பிரீமியம் பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
சென்னை, 11 மார்ச் (ஹி.ச.) போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய தாழ்த்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவையை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின்
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்


சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)

போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய தாழ்த்தள மின்சார குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவையை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய மின்சாரப் பேருந்து பணிமனையில் காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து வசதி மற்றும் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் மாநகர போக்குவரத்து கழகம் புதிய “பிரீமியம் பேருந்து சேவை”யை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 5 பிரீமியம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 40 கிலோமீட்டர் வரை கொண்ட இந்த வழித்தடங்களில் இந்த பேருந்துகள் சேவை செய்யும்.

இந்த பிரீமியம் பேருந்துகளில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த புதிய சேவையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் பிரீமியம் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam