Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)
மேற்கு ஆசியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போர்கள் உலகளவில் ராணுவ தளவாடங்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்யலாம் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
எல்லா நாடுகளும் இப்பொழுது தங்கள் பாதுகாப்பு மற்றும் ராணுவ தயார் நிலைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் அதிகரிப்பு, பெருகி வரும் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கான அரசாங்கத்தின் ஊக்கம் ஆகியவற்றால் இந்திய பாதுகாப்புத் துறை நல்ல முன்னேற்றம் காணும் என்று மோதிலால் ஓஸ்வால் கருதுகிறது.
மேலும், உலக ஆயுதச் சந்தையில் இந்தியாவின் பெயர் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. குறிப்பாக சப்ளை செயின் சிக்கல்களைக் குறுகிய காலத்தில் கவனிக்க வேண்டும் என்று மோதிலால் ஓஸ்வால் கூறியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கியமான உதிரி பாகங்களின் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் பாதுகாப்புத் திட்டங்கள் முடிய காலதாமதம் ஆகலாம்.
இருப்பினும், பல பாதுகாப்பு நிறுவனங்களின் நிர்வாக அறிக்கைகள் அடுத்த 15-18 மாதங்களில் பெரிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. பல முக்கியமான திட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன.
இந்த சாதகமான விஷயங்களை மனதில் வைத்து, நான்கு பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகளை வாங்க மோதிலால் ஓஸ்வால் பரிந்துரை செய்துள்ளது.
34% வரை விலை உயரும் டிஃபென்ஸ் பங்குகள்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பங்கிற்கு வாங்கலாம் என்று மோதிலால் ஓஸ்வால் பரிந்துரைத்துள்ளது. மேலும் இலக்கு விலையாக ரூ.520 நிர்ணயித்துள்ளது. இது தற்போதுள்ள விலையில் இருந்து சுமார் 14% உயர்வைக் காட்டுகிறது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்:
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன பங்கிற்கு மோதிலால் ஓஸ்வால் ரூ.5,500 இலக்கு விலையாக நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய விலையிலிருந்து சுமார் 38% உயர்வைக் குறிக்கிறது.
பாரத் டைனமிக்ஸ்:
பாரத் டைனமிக்ஸ் பங்குகளை வாங்கலாம் என்று தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 18 மாதங்களில் சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிலான ஆர்டர்களை நிறுவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்கின் இலக்கு விலை ரூ.1,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது தற்போதைய விலைகளிலிருந்து சுமார் 35% உயர்வைக் குறிக்கிறது.
அஸ்ட்ரா மைக்ரோவேவ்:
அஸ்ட்ரா மைக்ரோவேவ் பங்கிற்கு தரகு நிறுவனம் ரூ.1,150 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வருவாய் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போதைய விலையிலிருந்து சுமார் 15% வரை உயர்வு இருக்கும் என்று கூறியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM