Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 11 மார்ச் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்தில், கூலித் தொழிலாளர்கள் இரண்டு பேர் கட்டிட வேலைக்காக சுமார் 20 அடிக்கும்
மேற்பட்ட உயரத்தில் உள்ள இரும்பு ஏணி ஒன்றை தள்ளி சென்றனர்.
அப்போது அந்த ஏணி 11 கிலோ வாட் உயர் அழுத்த மின்சார கம்பி மீது மோதியது.
இதனால் ஏணியில் மின்சாரம் பயந்து அதை தள்ளி சென்ற இரண்டு கூலி தொழிலாளர்களும்
சம்பவ இடத்திலேயே உடல்கள் கருகி பரிதாபமாக மரணமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து மின்சாரத்தை
நிறுத்த செய்து இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு மஞ்சிரியாலா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பான சிசிடிவி பதிவு
காட்சி தற்போது வெளியாகி உயர் அழுத்த மின்சாரம் தாக்கினால் எத்தகைய விளைவு
ஏற்படும் என்பதை உணர்த்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam