தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கும் அலமாரியிலேயே வைத்து சீல் வைக்க வேண்டும் - இந்தாண்டு முதல் நடைமுறை
சென்னை, 11 மார்ச் (ஹி.ச.) 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 11.03.2026 முதல் 06.04.2026 வரை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 8,82,806 தனித்தேர்வர்கள் 25,801 மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 39
Sch


Hs


சென்னை, 11 மார்ச் (ஹி.ச.)

2025-26-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 11.03.2026 முதல் 06.04.2026 வரை நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்கள் 8,82,806 தனித்தேர்வர்கள் 25,801 மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 395 என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 12467 பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசித்தேர்வர்கள் 4219 தேர்வுமையங்களில் தேர்வர்கள் எழுதவுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் 12292 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அரசாணை நிலை எண் 54 மற்றும் 62 பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை நாள்.29.02.2016 மற்றும் 26.03.2022-ன்படி சொல்வதை எழுதுபவர் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சொல்வதை எழுதுபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும்,தேர்வுப்பணிகளுக்கு பதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கும்,

தேர்வுமையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும் தேர்வுமுறைகேடுகளை தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து சீல் வைக்க வேண்டும்.

இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக்கூடாது. மேற்காண் நடைமுறை இவ்வாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவருக்கு அம்மை நோய் (Chicken Pox) இருப்பின் அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்திடவும், மருத்துவ உதவிகளுக்கு தேர்வு மையங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனை மருத்துவர்களின் கைப்பேசி தொலைபேசி எண்களை பெற்று வைத்துக்கொள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்விற்கு வருகைபுரிந்த மாணாக்கர்களுக்கு வினாத்தாட்கள் வழங்கியபின்னர், ஒவ்வொரு தேர்வறையிலும் மீதமுள்ள வினாத்தாட்களை தேர்வறைக் கண்காணிப்பாளர்களே மாணவர்கள் உறையிலிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. சீலிடும் இத்தடைமுறை முறை காரணமாக வினாத்தாட்களின் மந்தணத்தன்மை மேலும் பலப்படுத்தப்படுகிறது.

இவ்வாண்டு நேரடி தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரி உறுதி செய்யவும், சார்ந்த மாவட்டங்களில் விண்ணப்பித்தலை உறுதி செய்யவும் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ